sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, மார்ச் 20, 2026 ,பங்குனி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

 'டவுட்' தனபாலு

/

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

 'டவுட்' தனபாலு

4


PUBLISHED ON : மார் 20, 2026 03:24 AM

Google News

PUBLISHED ON : மார் 20, 2026 03:24 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி: 'நடிகர் விஜய், பா.ஜ., மிரட்டலுக்கு அடிபணிய மாட்டார்' என, வி.சி., தலைவர் திருமாவளவன் கூறுகிறார். தி.மு.க.,வின் மிரட்டலுக்கு பயந்து, அடிபணிந்து, அடங்கி, ஒடுங்கி, பம்மி, வணங்கி, தி.மு.க., கூட்டணியில் ஒட்டிக் கொண்டிருக்கும் திருமாவளவன், பா.ஜ.,வை பார்த்து மிரட்டுகிறது என்று சொல்வது வேடிக்கை. அவருக்கு, உண்மையிலேயே தைரியம் இருந்தால் தி.மு.க.,வுக்கு அடங்க மறுத்து, அத்துமீறி, கூட்டணியை விட்டு வெளியே வர முடியுமா?

டவுட் தனபாலு: 'விஜயை மிரட்ட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை'ன்னு அடிச்சு பேசாம, திருமாவளவனுக்கு சவால் விடுறாரே... இதனால, திருமாவளவன் சொன்னது உண்மை தானோ என்ற, 'டவுட்' தான் வருது!

lll



தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை: உண்மையான அடிமை கூட்டணி என்றால், அது தி.மு.க., கூட்டணி கட்சிகள் தான். தொழிலாளர்கள், அடித்தட்டு மக்களுக்கு எந்த பிரச்னை வந்தாலும், கூட்டணி கட்சியினர் எதுவும் பேச மாட்டார்கள். அதேபோல பெண்களுக்கு பிரச்னை என்றாலும், தி.மு.க., கூட்டணி கட்சிகள் எதுவும் கேட்பதில்லை. இல்லாத காஸ் தட்டுப்பாட்டுக்கு ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர்; பெண் குழந்தைகள் பாதிப்பு அடைந்ததற்கு என்ன செய்தனர்?

டவுட் தனபாலு: ஏற்கனவே, தி.மு.க., தொகுதிகளை குறைச்சு தர்றதால, கூட்டணி கட்சியினர் விரக்தியில் இருக்காங்க... இந்த நேரத்தில், ஆளுங்கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டம், போராட்டம் எல்லாம் நடத்தி, மேலும் தொகுதிகளை குறைச்சிடுவாங்கன்னு பயப்படுறாங்களோ என்ற, 'டவுட்'தான் வருது!

lll

த.மா.கா., தலைவர் வாசன்: கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் போன்ற குற்றங்களுக்கு போதை கலாசாரமே ஆணிவேராக இருந்த போதிலும், அவற்றை முற்றிலும் ஒழிக்காமல், தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப்பது, மிகுந்த வருத்தம் அளிக்கிறது. இனியும் தாமதிக்காமல், தமிழக அரசு போதை ஆசாமிகளின் குற்றங்களை தடுக்க, உடனே கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டவுட் தனபாலு: இப்ப, தமிழக அரசால ஒரு குண்டூசியை கூட நகர்த்த முடியாது... எல்லா அதிகாரமும், தேர்தல் கமிஷனுக்கு தான் என்பது உங்களுக்கு தெரியாதா... அதனால, தேர்தல் கமிஷனிடம் முறையிட்டு, குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரைக்குமாவது, 'டாஸ்மாக்' மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுத்தால், 'டவுட்'டே இல்லாம உங்களை பாராட்டலாம்!

lll






      Dinamalar
      Follow us