sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

தினம் தினம்

/

டவுட் தனபாலு

/

'டவுட்' தனபாலு

/

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

'டவுட்' தனபாலு

2


PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

Google News

PUBLISHED ON : மே 10, 2025 12:00 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பா.ம.க., தலைவர் அன்புமணி: மாமல்லபுரத்தில் நாளை நடக்கவுள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாடு, எந்தவித விமர்சனத்திற்கும் உள்ளாகி விடக்கூடாது. தொண்டர்கள் அனைவரும், ராணுவத்திற்கு இணையான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது. மாநாட்டுக்கு வரும் பாதையிலும், மாநாடு முடிந்து திரும்பும் போதும் ஹோட்டல்கள் திறந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இரு வேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வர வேண்டும்.

டவுட் தனபாலு: மற்ற கட்சிகள் எல்லாம் மாநாடு நடத்தினா, அந்த வழியா போகும் தொண்டர்களால நல்லா வியாபாரம் நடக்கும்னு, பலரும் சிறப்பு கடைகளை திறப்பாங்க... ஆனா, நீங்க மாநாடு நடத்தினா மட்டுமே, இருக்கிற கடைகளையும் மூடிட்டு வியாபாரிகள் ஓடுறாங்க... உங்களை விட்டு ஓடுறது அவங்க மட்டுமில்ல, அவங்க மற்றும் அவங்க குடும்பத்தினர் ஓட்டுகளும் தான் என்பதில், 'டவுட்'டே இல்லை!



அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி: காஷ்மீரில் சுற்றுலா பயணியரை கொலை செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துல்லிய தாக்குதல் நடத்திய பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது. எங்கள் கட்சியின் பொதுச்செயலர் பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 1,000 இளைஞர்களை, பாக்., யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட அழைத்து செல்ல தயாராக உள்ளோம்.

டவுட் தனபாலு: பா.ஜ.,வினர் கூட இந்த அளவுக்கு உணர்ச்சி வசப்படலையே... 'பழனிசாமி அப்படி எல்லாம் உத்தரவு போடவும் மாட்டாரு; நாமும் யுத்த களத்துக்கு போக வேண்டியிருக்காது' என்பதை நல்லா தெரிஞ்சுக்கிட்டு, இப்படி அடிச்சு விடுறீங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!



நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்: 'புதுக்கோட்டை, வடகாடு கலவரத்திற்கு ஜாதி மோதல் காரணமல்ல; மது போதையில் ஏற்பட்ட முன்விரோதமே காரணம்' என, காவல் துறை புதிய விளக்கம் அளித்துள்ளது; அது வெட்கக்கேடானது. ஜாதி கலவரம் தான், தி.மு.க., அரசின் அவமானமா, மது போதை கலவரம் வெகுமானமா. இத்தனை வன்முறை வெறியாட்டங்களுக்கு காரணமான மதுவை, அரசு ஏன் தடை செய்யவில்லை?

டவுட் தனபாலு: சமூக நீதி பேசும் திராவிட மாடல் ஆட்சியில், ஜாதி கலவரம் நடக்குது என்றால், ஒட்டுமொத்த அரசுக்கும் கெட்ட பெயராகிடுமே... அதனால தான், 'மது போதை தகராறு'ன்னு போலீசாரை விட்டு பூசி மெழுகியிருக்காங்க என்பது, 'டவுட்'டே இல்லாம தெரியுது!








      Dinamalar
      Follow us