PUBLISHED ON : நவ 06, 2024 12:00 AM

நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் மகளான நடிகை மதுவந்தி: முன்னாள் ராணுவ அதிகாரி முகுந்த் வரதராஜனின் தேச பக்திமற்றும் அவருடைய செயல்பாடுகளை வைத்து, அமரன் என்றதிரைப்படம் எடுத்துள்ளனர். அதை யாரும் குறை சொல்லவில்லை; வரவேற்கிறோம். ஆனால்,படத்தின் முக்கிய கதாபாத்திரமான முகுந்த் வரதராஜன், பிராமணர் சமூகத்தைச் சேர்ந்தவர் என, எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை. இது தான் சமூக நீதியா?
டவுட் தனபாலு: அந்த படத்தைதயாரித்தவர் கமல்ஹாசன்... அவர், திராவிட மாடல் பேசும் தி.மு.க., கூட்டணியில் இருக்கார்...தான் சார்ந்த பிராமணர்சமுதாயத்தை உயர்த்தி பிடிச்சா, தனக்கு, 'ரிசர்வ்' செய்து வைத்துள்ள ராஜ்யசபா எம்.பி.,சீட்டுக்கு வேட்டு வந்துடுமோன்னு பயந்து, வரலாற்றை மறைச்சுட்டாரோ என்ற, 'டவுட்' தான் வருது!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம்: தி.மு.க., ஆட்சியில் வளர்ச்சி திட்டங்கள் ஒன்றும் இல்லை. அ.தி.மு.க., ஆட்சி காலத்தில்சிறப்பாக செயல்படுத்தப்பட்ட பல திட்டங்களையும் முடக்கியதுதான், அவர்களின் சாதனை. கஞ்சா, கள்ளச்சாராயம், போதைப்பொருட்களின் நடமாட்டம் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல்இருக்கிறது.
டவுட் தனபாலு: 'குட்கா' மொத்தவியாபாரிகளிடம் மாதாந்திர மாமூல் வாங்கியது தொடர்பாக, உங்க கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் சிலர் மீது வழக்குகள்இருப்பதை மறந்துட்டு, தி.மு.க., ஆட்சி மீது குற்றம் சொல்றீங்களோஎன்ற, 'டவுட்' தான் வருது!
தமிழக பா.ஜ., ஒருங்கிணைப்புகுழு தலைவர் எச்.ராஜா: நாளை, தஞ்சையில் நடக்கும்கட்சி மற்றும் அரசு நிகழ்ச்சிகளில் துணை முதல்வர்உதயநிதி பங்கேற்க இருப்பதாகதகவல் வெளியாகியுள்ளது.அவரை வரவேற்பதற்காக விளம்பரம் செய்ய திட்டமிட்டு, அதற்காக, கோவில் பணத்தில்இருந்து செலவு செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அவருக்கு, கோவில் நிதியில் இருந்து 1 ரூபாய் கூட, செலவு செய்யக்கூடாது.
டவுட் தனபாலு: நீங்கசொல்றது சரி தான்... 'கோவில்கள்மீதும், ஹிந்து கடவுள்கள் மீதும்எனக்கு நம்பிக்கையில்லை... அதனால, அந்த நம்பிக்கையுள்ளபக்தர்கள் தந்த காணிக்கை பணத்தில் இருந்து, எனக்கு எந்த வரவேற்பு விளம்பரமும் செய்யக்கூடாது'ன்னு உதயநிதியேமுன்வந்து அறிவிச்சுட்டா, 'டவுட்'டே இல்லாம அவரை பாராட்டலாம்!

