PUBLISHED ON : மார் 13, 2026 07:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்: முதுகுளத்துார் - சாயல்குடி ரோடு பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே சில நாட்களுக்கு முன்பு ரோட்டின் நடுவில் குழி தோண்டப்பட்டு குடிநீர் குழாய் அமைக்கப்பட்டது.
தோண்டப்பட்டுள்ள ரோட்டை முறையாக சரி செய்யாததால் பள்ளம் ஏற்பட்டிருந்தது. பள்ளத்தில் ஜல்லிக்கற்கள் மட்டும் கொட்டப்பட்டுள்ளதால் டூவீலரில் செல்பவர்கள் விபத்தில் சிக்கினர். இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக காவல்காரன் சந்து அருகே ரோட்டில் பள்ளம் சரி செய்யப்பட்டது.

