/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
ஓட்டுபட்டறை சாலையில் கொட்டப்பட்ட மண் அகற்றம்; 'தினமலர்' செய்தி எதிரொலி

PUBLISHED ON : அக் 03, 2024 12:00 AM

குன்னுார் : குன்னுார் ஓட்டுபட்டறை சாலையில் கொட்டப்பட்ட மண், 'தினமலர்' செய்தி எதிரொலியால் உடனடியாக அகற்றப்பட்டது.
குன்னுார் ஓட்டுப்பட்டறை சாலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் குழாய் பதிக்கும் பணிகள் நடந்தன. அதில், தோண்டப்பட்ட மண் சாலையில் கொட்டப்பட்டதால். வாகன போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டதுடன், மக்கள் நடமாட சிரமப்பட்டனர்.
பழைய அருவங்காடு, சோகத்தொரை உள்ளிட்ட அரசு பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக, 1ம் தேதி 'தினமலர்' நாளிதழலில் செய்தி வெளியானது. உடனடியாக ஆய்வு செய்த அதிகாரிகள், அங்கிருந்த மண்ணை அகற்றி, குழாய் பதித்த இடங்களை மூடினர்.
நகராட்சி கமிஷனர் சசிகலா கூறுகையில், ''பிராதான குழாய் அமைக்கும் பணி முழுமை பெற்றவுடன் சாலை சமன்செய்யப்படும்,'' என்றார்.