உள்ளடக்கத்திற்கு செல்ல
PUBLISHED ON : ஏப் 05, 2026 04:36 AM
அ நிறம் | அளவு
சோழவந்தான்: மேலக்கால் அம்பேத்கர் காலனி அங்கன்வாடி மையத்தை சுற்றி கால்நடைகள் கட்டப்படுவதால் கழிவுகள் குவிந்து துர்நாற்றம் வீசியது.
மேலும் கட்டுமான பொருட்களும், கட்டட இடிபாடுகளும் அருகிலேயே குவிக்கப்பட்டிருந்தன. இங்கிருந்து வெளியேறும் பாம்பு, பூரான் உள்ளிட்ட விஷ ஜந்துக்களால் குழந்தைகளுக்கு விபரீதம் விளைய அதிக வாய்ப்பிருந்தது.
இதுகுறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து உடனே செயல்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். அப்பகுதி பொதுமக்கள் அதிகாரிகள், தினமலர் நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.
