PUBLISHED ON : மார் 05, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார், : விநாயகபுரத்தில் 1.5 ஏக்கரில் ரூ.2.25 கோடியில் மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாட்டிற்கு வராமல் பாழாகியது.
இது குறித்து தினமலர் நாளிதழில் தொடர்ந்து செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக அமைச்சர்கள் மூர்த்தி, சிவசங்கர் நேற்று திறந்து வைத்தனர். நிகழ்ச்சியில் இணை போக்குவரத்து கமிஷனர் சத்தியநாராயணன், வடக்கு, தெற்கு ஆர்.டி.ஓ., க்கள் சித்ரா, சிங்காரவேல், மோட்டார் வாகன ஆய்வாளர் சரவணக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

