/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
செய்தி எதிரொலி மின்கம்பம் மாற்றியமைப்பு
/
செய்தி எதிரொலி மின்கம்பம் மாற்றியமைப்பு
PUBLISHED ON : செப் 18, 2024 12:00 AM
திருத்தணி:திருத்தணி நகராட்சி குண்டலுாரில் உள்ள விநாயகர் கோவில் பின்புறத்தில், குடியிருப்பு பகுதியில் மின்கம்பம் உள்ளது. இந்த மின்கம்பத்தின் சிமென்ட் பெயர்ந்தும், இரும்பு கம்பிகள் துருப்பிடித்து உடைந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
அப்பகுதி மக்கள் பலமுறை மின்வாரிய அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடம் புகார் அளித்தும், எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து நம் நாளிதழில் நேற்று முன்தினம் படத்துடன் செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, நேற்று மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் உத்தரவின்படி, மின் ஊழியர்கள் இப்பகுதியில் பழுதடைந்த மின்கம்பத்தை அகற்றி, புதிதாக அமைத்து, அதன்பின் மின் வினியோகம் செய்யப்பட்டது. இதனால், குடியிருப்பு மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

