PUBLISHED ON : மே 18, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி, : உதினிபட்டியில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் தாழ்வாக செல்கிறது.
காற்று வீசும் போது கம்பிகள் உரசி மின்சப்ளை 7 நாட்களாக துண்டிக்கப்பட்டு பயிர்கள் கருக ஆரம்பித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக மின்கம்பிகளை சரிசெய்து, மின் சப்ளை கொடுக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

