/
தினம் தினம்
/
செய்தி எதிரொலி
/
அழுகிய பழங்கள், தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி
/
அழுகிய பழங்கள், தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி
அழுகிய பழங்கள், தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி
அழுகிய பழங்கள், தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல்; 'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலி
PUBLISHED ON : ஏப் 07, 2024 12:00 AM

கோவை;'தினமலர்' நாளிதழ் செய்தி எதிரொலியாக, உணவுப்பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், 24 கிலோ அழுகிய பழங்கள், 29 லிட்டர் தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.
கோடை வெய்யிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வருகிறது. இதைத்தவிர்க்க, மக்கள் குளிர்பானங்கள், தர்பூசணி பழங்கள், பழரசங்கள் உள்ளிட்டவற்றை நாடிச் செல்கின்றனர்.
தரமற்ற குளிர்பானங்கள், அழுகிய பழங்கள் பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளது.
இதுகுறித்து, நமது நாளிதழில் கடந்த, 2ம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து கோவை மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை சார்பில், கடந்த சில தினங்களாக பல்வேறு பகுதிகளிலும் சோதனை நடத்தப்பட்டது.
மாவட்டம் முழுவதும், 66 கடைகளில் நடத்தப்பட்ட ஆய்வில், 24 கிலோ அழுகிய பழங்கள், 29 லிட்டர் தரமற்ற குளிர்பானங்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. மாவட்ட உணவுப்பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்செல்வன் கூறியதாவது:தரமான பழச்சாறு அனைவருக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூஸ் தயாரிக்க சுத்தமான நீரை பயன்படுத்த வேண்டும். தேக்கி வைத்த நீரை பயன்படுத்த கூடாது.
நல்ல பழங்கள் பயன்படுத்த வேண்டும். பழங்கள் வைக்கும் இடங்களை தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும். கைகளில் கையுறை அணியவும், உள்ளிட்ட அறிவுரைகள் வழங்கப்பட்டிருந்தன. லைசென்ஸ் பெறாமல் ஜூஸ் கடைகள் நடத்தக்கூடாது.
மிக்ஸியை கழுவி தூய்மையாக வைத்து கொள்ள வேண்டும், திறந்த நிலையில் பழங்களை வைக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இவ்விதிகளை பின்பற்றாத கடைகள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழங்கள், குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது. 18 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. ஆய்வு தொடர்ந்து மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

