/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்:பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்
/
அறிவியல் ஆயிரம்:பாதிப்பை உருவாக்கும் ரசாயனம்
PUBLISHED ON : டிச 15, 2025 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உணவு தயாரிப்பு, பார்சல் (பேக்கேஜிங்) ஆகியவற்றில்அதிகரிக்கும் ரசாயன பயன்பாட்டால் புற்றுநோய், நரம்பியல் வளர்ச்சி கோளாறு, கருவுறுதலில் குறைபாடுஉள்ளிட்ட உடல்நல பாதிப்பும், வேளாண் உற்பத்தி குறைவு உள்ளிட்ட சுற்றுச்சூழல் பாதிப்பும் ஏற்படுகிறது என ஆய்வு தெரிவித்துள்ளது.
உணவுப்பொருட்கள் பார்சலுக்கான பிளாஸ்டிக்கில் பயன்படுத்தப்படும் 'பீஸ்பீனால், தாலேட்' ரசாயனங்களால் ஹார்மோனில் பாதிப்பு உருவாகிறது. இதன் காரணமாக 2025 - 2100ல் 20 கோடி - 70 கோடி குழந்தைகள் பிறப்பு குறையும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

