/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம்: தாவரங்களின் கவசம்
/
அறிவியல் ஆயிரம்: தாவரங்களின் கவசம்
PUBLISHED ON : டிச 22, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவரங்களுக்கு முள் ஒரு பாதுகாப்பு. அவ்வகையில் ரோஜாக்களுக்கு முள் உள்ளது. இதுபோல வெவ்வேறு தாவரங்களுக்கு வேறு பாதுகாப்புகள் இருக்கின்றன. இதன்படி சில கசப்புச் சுவையும், சில உமிழும் வேதிப் பொருட்களையும் கொண்டு அதை கடிக்க வரும் பூச்சிகளுக்கு விஷமாக மாறுகின்றன.
இவை தாவரங்களின் வளர்ச்சி, பாதுகாப்புக்காக அமைந்துள்ளன. தாவரங்கள் போல சில விலங்குகளுக்கும் பாதுகாப்பு அமைப்பு உண்டு. ஆமைக்கு அதன் ஓடுதான் கவசம். போராட வேண்டும் என்பதற்காகவே சிங்கத்துக்குக் கூரிய நகங்கள் உண்டு. முள்ளம்பன்றிக்கு உடல் எல்லாம் முள்.

