/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : வளைய சூரிய கிரகணம்
/
அறிவியல் ஆயிரம் : வளைய சூரிய கிரகணம்
PUBLISHED ON : அக் 02, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
வளைய சூரிய கிரகணம்
இந்தாண்டின் 2வது சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது. சூரியன், பூமி, நிலவு ஒரே நேர்கோட்டில் வரும் போது, சூரியன் - பூமி இடையில் நிலவு இருக்கும். அப்போது சூரிய ஒளியை நிலவு மறைப்பதால் அதன் நிழல் பூமியில் தெரியும். இதுதான் சூரிய கிரகணம். அமாவாசையன்று ஏற்படும். இன்று சூரியனை மத்தியில் நிலவு மறைப்பதால் சூரியன் வளையம் போன்று தோன்றும். இது 'வளைய சூரிய கிரகணம்' என அழைக்கப்படுகிறது. இது பூமியில் இருந்து நிலவு அதிக துாரத்தில் இருக்கும் போது ஏற்படுகிறது. இந்தியாவில் தெரியாது. அர்ஜென்டினா, சிலி உள்ளிட்ட நாடுகளில் தெரியும்.

