உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : ஏப் 13, 2026 11:26 PM

அ நிறம் | அளவு
அறிவியல் ஆயிரம்
மின்சாரம் இல்லாத ஒளி
இரவில் ஒளி வீசியவாறு செல்லும் மின்மினி பூச்சிகள் நம்மை கவரும். இணையை தேடுதல், தற்காப்பு, இரை தேடுதலுக்காக இவ்வாறு ஒளியை வெளிப்படுத்துகிறது. இதன் முட்டை, புழு, முதிர்ந்த வண்டுகள் என எல்லாமே ஒளிரும் திறன் வாய்ந்தவை. சாதாரண விளக்குகளில் வெப்பம் இருக்கும். ஆனால் இதன் வெளிச்சத்தில் வெப்பம் கிடையாது. இதன் உடலிலுள்ள 'லுாசிபெரின்' என்ற பொருள் 'லுாசிபெரேஸ்' என்ற என்சைமுடன் இணைந்து வேதிவினை புரிவதால் ஒளி உருவாகிறது. குளிர்காலத்தில் மண்ணுக்கு அடியில் பதுங்கும். இவை மண்புழு, நத்தையை உணவாக உட்கொள்கிறது.
