/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : உதவும் கண்ணீர்...
/
அறிவியல் ஆயிரம் : உதவும் கண்ணீர்...
PUBLISHED ON : டிச 30, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிவியல் ஆயிரம்
உதவும் கண்ணீர்...
கண் விழிக்குச் சற்று மேலே கண்ணீர்ச் சுரப்பியில் உள்ள சிறப்பு செல் கண்ணீரை உற்பத்தி செய்கிறது. இது கண்ணில் துாசி விழுந்தால் அது விழி, லென்ஸ் போன்ற பகுதி பாதிக்காத வகையில் சுத்தம் செய்து கண்களைப் பாதுகாக்கிறது. கண்ணீரை அகற்ற வடிகால் குழாய் கண்ணில் இருந்து மூக்குக்குச் செல்கிறது. எனவேதான் கூடுதல் கண்ணீர் சிந்தும்போது மூக்கில் நீர் வடியும். கண் வறண்டு விடாமல் சிறிதளவு கண்ணீர் எப்போதும் சுரந்துகொண்டே இருக்கும். கண்ணீரில் உப்பு தவிர பல்வேறு வேதிப் பொருட்கள் நிரம்பிய திரவக் கலவை உள்ளது.

