தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 03, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

மண்வாசம் காரணம்

கோடை காலத்துக்குப்பின் முதல் மழை பெய்ததும் 'மண்வாசம்' ஏற்படுவது வழக்கம். இதற்கான காரணத்தை முதன்முதலில் அறிவியல்பூர்வமாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் இருவர் வெளியிட்டனர். எளிதில் ஆவியாகும் தாவர எண்ணெய், மண்ணில் உள்ள 'ஆக்டினோமைசைட்' எனும் நுண்ணுயிரி வெளிப்படுத்தும் ஜியோஸ்மின் எனும் வேதிப்பொருள் கலந்த கலவைதான் என 1964ல் கண்டறிந்து தெரிவித்தனர். இந்த நறுமணத்துக்கு பெட்ரிகார் என்ற அறிவியல் பெயர் உண்டு. தவிர தாவரங்கள் வெளியிடும் வியர்வை போன்ற எண்ணெய் பொருட்களும் காரணம்.

தகவல் சுரங்கம்

உலக சைக்கிள் தினம்

சைக்கிள் பயன்பாட்டை மீண்டும் அதிகரிக்கும் விதமாக ஐ.நா., சார்பில் ஜூன் 3ல் உலக சைக்கிள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. தினமும் நடை, ஓட்டம், விளையாட்டு, சைக்கிள் ஓட்டுதல் என ஏதாவது ஒரு வகையில் உடற்பயிற்சி மேற்கொள்வது உடல்நலத்துக்கு நல்லது. இதிலும் நடை, சைக்கிள் பயிற்சி இருதய பாதிப்பு, பக்கவாதம், கேன்சர், நீரிழிவு போன்ற பாதிப்புகளை தடுக்கிறது. சைக்கிளுக்கு எரிபொருள் தேவையில்லை என்பதால் செலவு இல்லை. முக்கியமாக சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உதவுகிறது. தினமும் சைக்கிள் ஓட்டுவதால் உடல் புத்துணர்ச்சி அடைகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us