தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அறிவியல் ஆயிரம்/ அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்

அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்


PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 30, 2024 12:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அறிவியல் ஆயிரம்

கரப்பான் பூச்சியின் பூர்வீகம்

உலகளவில் கரப்பான் பூச்சி உள்ளது. இது பாத்ரூம், கிச்சனில் உள்ள தண்ணீர் குழாய்களில் மறைந்திருக்கும். 6 கால்களை உடையது. 30 இனங்கள் உள்ளன. இதன் ஆயுள்காலம் ௧௦௦ நாள் - ௩ ஆண்டுகள். இந்நிலையில் இதன் பூர்வீகம் குறித்து ஆய்வு நடத்திய அமெரிக்க விஞ்ஞானிகள், இது தெற்காசியாவில் இருந்து இடம்பெயர்ந்து ஐரோப்பா சென்று, பின் உலகம் முழுவதும் பரவியிருக்கக்கூடும் என கண்டுபிடித்து உள்ளனர். 6 கண்டங்களை சேர்ந்த 17 நாடுகளில் இருந்து 280 கரப்பான் பூச்சிகளின் மரபணுவை சோதனை நடத்தியதில் இது கண்டறியப்பட்டது.

தகவல் சுரங்கம்

ஆயிரம் ஏரிகளின் நாடு

ஐரோப்பாவில் உள்ள பின்லாந்தில் 1.68 லட்சம் ஏரிகள், 1.79 லட்சம் தீவுகள் உள்ளன. இதனால் இது 'ஆயிரம் ஏரிகளின் நாடு' என அழைக்கப்படுகிறது. இதில் பெரிய ஏரி சாய்மா. இது ஐரோப்பாவில் நான்காவது பெரியது. இந்நாட்டின் எல்லையாக சுவீடன், நார்வே, ரஷ்யா உள்ளன. இதன் பரப்பளவு 3.38 லட்சம் சதுர கி.மீ. மக்கள்தொகை 56 லட்சம். பின்லாந்தின் மொத்த பரப்பளவில் 10 சதவீதம் ஏரி, ஆறு, குளங்களாக உள்ளன. 78 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. மரக்கட்டை ஏற்றுமதியில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக திகழ்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us