/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 15, 2024 12:00 AM

அறிவியல் ஆயிரம்
'சைபர் கிரைம்': யார் முதலிடம்
உலகில் இணைய வழி குற்றங்கள் (சைபர் கிரைம்) அதிகரித்து விட்டன. 'சைபர் கிரைம்' என்பது கம்ப்யூட்டர், அலைபேசி, நெட்வொர்க் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்கள் வழியே நடத்தப்படும் மோசடி. இந்நிலையில் 'சைபர்' குற்றங்கள் அதிகம் நடக்கும்நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதலிடத்தில் உள்ளது என பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலை, ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் பல்கலை நடத்திய ஆய்வு தெரிவித்துள்ளது. அடுத்த இடங்களில் உக்ரைன், சீனா, அமெரிக்கா, நைஜீரியா, ருமேனியா,வடகொரியா, பிரிட்டன், பிரேசில், இந்தியா உள்ளன.
தகவல் சுரங்கம்
அழியாத 'மை' வரலாறு
தேர்தலில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஓட்டளிப்பதை தடுக்கும் விதமாக, ஓட்டளித்ததன் அடையாளமாக வாக்காளரின் விரலில் 'மை' வைக்கப்படுகிறது. இது சில நாட்களுக்கு அழியாமல் இருக்கும். இந்நடைமுறை 1962ல் மூன்றாவது லோக்சபா தேர்தலில் அறிமுகமானது. இது கர்நாடகாவில் உள்ள மைசூரு பெயின்ட், வார்னிஷ் நிறுவனத்தில் தயாரிக்கபடுகிறது. இது ஒரு கர்நாடக அரசு நிறுவனம். 10 கிராம் பாட்டிலில் உள்ள இந்த 'மை'-யை 700 வாக்காளர்களுக்கு பயன்படுத்தலாம். சிங்கப்பூர், மலேசியா, தென் ஆப்ரிக்கா உட்பட 60 நாடுகளுக்கு 'மை' ஏற்றுமதியாகிறது.

