/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
/
அறிவியல் ஆயிரம் : தகவல் சுரங்கம்
PUBLISHED ON : ஏப் 06, 2024 12:00 AM
அறிவியல் ஆயிரம்
இரவில் ஒளிரும் கண்
அனைத்து கண்களுமே இரவில் ஒளியை பிரதிபலிக்கும். ஆனால் சில விலங்குகளின் கண்கள், இரவு வெளிச்சத்தில் மிக அதிகளவில் மின்னுவதை பார்க்கலாம். இதற்காக அதன் கண் விழித்திரையின் பின்புறம் 'டேபட்டம் லுாசிடம்' என்ற சிறப்பு வகை பிரதிபலிப்பு அடுக்கு இருக்கிறது. இவை விலங்கின் கண்களில் ஒளி மின் அழுத்திகளுக்கு கிடைக்கும் ஒளியை அதிகரிக்கிறது. இது விலங்கின் கண்கள் உறிஞ்சப்படும் ஒளியின் அளவை அதிகரித்து, பிரதிபலிக்க வைக்கிறது. இந்த பிரதிபலிப்பு நிறம், விலங்குளை பொறுத்து மாறுபடும்.
தகவல் சுரங்கம்
அமைதிக்கான விளையாட்டு தினம்
விளையாட்டு என்பது உடல், மனதை ஆரோக்கியமாக வைக்கிறது. பல்வேறு மொழி, இனம், கலாசார வேறுபாடுகளை கடந்து உலக மக்களை ஒருங்கிணைக்கிறது. விளையாட்டுக்கு உலகை மாற்றும் சக்தி உண்டு. சர்வதேச அளவில் நிலையான வளர்ச்சி, அமைதி, ஒற்றுமை, மனிதநேயம் ஏற்பட விளையாட்டு வழிவகுக்கிறது. ஐ.நா., சார்பில் ஏப். 6ல் வளர்ச்சி, அமைதிக்கான சர்வதேச விளையாட்டு தினம் கடைபிடிக்கப்படுகிறது. 'அமைதியை உள்ளடக்கிய சமூகத்தை மேம்படுத்த விளையாட்டை ஊக்குவித்தல்' என்பது இந்தாண்டு மையக்கருத்து.

