/
தினம் தினம்
/
அறிவியல் ஆயிரம்
/
அறிவியல் ஆயிரம் :மக்கள்தொகை எப்போது குறையும்
/
அறிவியல் ஆயிரம் :மக்கள்தொகை எப்போது குறையும்
PUBLISHED ON : ஜூலை 19, 2024 12:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக மக்கள்தொகை 75 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
அடுத்த பத்தாண்டுகளில் மேலும் 200 கோடி அதிகரிக்கும் என ஐ.நா., தெரிவித்துள்ளது. இருப்பினும் உலக மக்கள்தொகை 2080களில் 1020 கோடி என உச்சம் தொட்டு, பின் குறைய துவங்கும் என விஞ்ஞானிகள் மதிப்பிட்டுள்ளனர். 2024ன் படி சீனா, ஜப்பான், ஜெர்மனி உட்பட 63 நாடுகளில் மக்கள்தொகை ஏற்கனவே அதன் உச்சத்தை தொட்டு விட்டது. இதனால் அங்கு குறைய தொடங்கவுள்ளது. தற்போது 140 கோடியாக உள்ள சீன மக்கள்தொகை 2100ல் 63.30 கோடியாக குறையும் என கணித்துள்ளனர்.

