தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/தினம் தினம்/அக்கம் பக்கம்/ பொறுப்பு வந்துடுச்சா?

 பொறுப்பு வந்துடுச்சா?

 பொறுப்பு வந்துடுச்சா?


PUBLISHED ON : ஜூன் 18, 2026 01:00 AM

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூன் 18, 2026 01:00 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'வாழ்க்கையிலேயே இப்போது தான் உருப்படியாக பேசியிருக்கிறார்...' என, ஜம்மு - காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி தலைவருமான மெஹபூபா முப்தி குறித்து கூறுகின்றனர், அங்குள்ள மக்கள்.

மெஹபூபா முப்தி, இதற்கு முன், ஜம்மு - காஷ்மீர் முதல்வராக பதவி வகித்துள்ளார். முதல்வராக இருக்கும்போது மட்டும் சற்று அமைதியாக இருப்பார். எதிர்க்கட்சியாகி விட்டால், வேறு அவதாரம் எடுத்து விடுவார். பாகிஸ் தானுக்கு ஆதரவாக பேசுவார் ; பயங்கரவாதிகளுக்கு வக்காலத்து வாங்குவார்.

அதே போல, காஷ்மீரில் நடைபெறும் அமர்நாத் யாத்திரை குறித்தும், கடந்த காலங்களில் சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்துள்ளார். காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகையில் இயற்கையாகவே உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, ஆயிரக்கணக்கான பக்தர்கள் யாத்திரை மேற்கொள்வது வழக்கம். நடப்பாண்டு யாத்திரை, விரைவில் துவங்கவுள்ளது.

இயற்கை சீற்றம் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்கு தல் போன்ற காரணங்களால், யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுவது உண்டு.

சமீபத்தில் இது குறித்து பேசிய மெஹபூபா முப்தி, 'அமர்நாத் பனி லிங்கத்தை தரிசிக்க வரும் ஒவ்வொரு பக்தரும் நம் விருந்தினர்கள். யாத்திரைக்கு வருவோரை காஷ்மீர் மக்கள் பாதுகாக்க வேண்டும். வெறுப்புணர்வு, பிரிவினைக்கு இடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு...' என தெரிவித்தார்.

காஷ்மீர் மக்களோ, 'மெஹபூபா முப்தி இப்படி பேசியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. இப்போது தான், அவர் பொறுப்பை உணர்ந்து செயல்படுகிறார்...' என்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us