sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 18, 2026 ,பங்குனி 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்

தினம் தினம்


ஜோசியம்


காலண்டர்


ஆன்மிகம்


வாராவாரம்


இணைப்பு மலர்


போட்டோ


உலக தமிழர்


ஸ்பெஷல்



/

தினம் தினம்

/

அக்கம் பக்கம்

/

 வயிற்றெரிச்சல் கோஷ்டி!

/

 வயிற்றெரிச்சல் கோஷ்டி!

 வயிற்றெரிச்சல் கோஷ்டி!

 வயிற்றெரிச்சல் கோஷ்டி!


PUBLISHED ON : மார் 17, 2026 01:31 AM

Google News

PUBLISHED ON : மார் 17, 2026 01:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

'மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் நேர்மையாக செயல்பட வேண்டும்...' என கவலை தெரிவித்துள்ளார், பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் செயல் தலைவர் கே.டி.ராமா ராவ்.

தெலுங்கானாவில், முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. பிரதான எதிர்க்கட்சியான பாரத் ராஷ்ட்ர சமிதி, லோக்சபா தேர்தல், சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் என, அனைத்து தேர்தல்களிலும் தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறது.

பாரத் ராஷ்ட்ர சமிதி ஏற்கனவே ஆளுங்கட்சியாக இருந்தபோது, எதிர்க்கட்சியினரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தற்போது இந்த வழக்கை துாசு தட்டியுள்ளார், முதல்வர் ரேவந்த் ரெட்டி. கே.டி.ராமா ராவ், அவரது தந்தையும், முன்னாள் முதல்வருமான சந்திரசேகர ராவ் ஆகியோர், விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராமா ராவ், 'முதல்வர் ரேவந்த் ரெட்டிக்கு தொடர்புடைய பினாமி நிறுவனத்திற்கு அரசு ஒப்பந்தங்கள் முறைகேடாக ஒதுக்கப் படுகின்றன.

'மற்ற மாநிலங்களில் எல்லாம் எதிர்க்கட்சியினர் மீது பாய்ந்து பாய்ந்து வழக்கு போடும் சி.பி.ஐ., அமலாக்கத்துறை போன்ற மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், ரேவந்த் ரெட்டி மீது மட்டும் கரிசனம் காட்டுவது ஏன்...?' என, ஆவேசப்பட்டார்.

ரேவந்த் ரெட்டி தரப்போ, 'வயிற்றெரிச்சலில் புலம்புகிறார்...' என, ராமா ராவை கிண்டல் அடிக்கிறது.






      Dinamalar
      Follow us