உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தென் மாநிலங்களில் 400 கோடி வசூல் கடந்த 'ராமாயணா'

தென் மாநிலங்களில் 400 கோடி வசூல் கடந்த 'ராமாயணா'

ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் வெளியான 'ராமாயணா' படம் தென் மாநிலங்களில் 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகியவற்றுடன் ஹிந்தி மொழி பதிப்பையும் சேர்த்த மொத்த வசூல் இது.

நிகர வசூலில் அதிகபட்சமாக கன்னடத்தில் 83 கோடி, தெலுங்கில் 60 கோடி, மலையாளம் மற்றும் தமிழில் தலா 46 கோடி என 235 கோடி வசூலைக் கடந்துள்ளது.

ஒரு ஹிந்திப் படம் தென் மாநிலங்களில் பெற்ற, மொத்த வசூலில் 'துரந்தர் 2' படம் வசூலித்திருந்த 300 கோடி வசூலை கடந்த வாரங்களிலேயே முறியடித்துட்டது 'ராமாயணா'.

தற்போதைய நிலவரப்படி இப்படம் உலக அளவில் 1800 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இந்திய வசூல் 1200 கோடி, வெளிநாட்டு வசூல் 600 கோடி. இன்னும் 10 கோடிக்கு மேல் சூலித்தால் 'துரந்தர் 2' வசூல் சாதனையை முறியடித்துவிடும். இன்றைய வசூலில் இது நடந்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !