உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக் : திறமை இருந்தும் ஜொலிக்காமல் மறைந்த பாக்கியநாதன்

பிளாஷ்பேக் : திறமை இருந்தும் ஜொலிக்காமல் மறைந்த பாக்கியநாதன்

திருநெல்வேலி மாவட்டம் கடையத்தை சேர்ந்தவர் பாக்கியநாதன். சினிமா ஆசையால் சென்னை வந்து, கே.பாக்யராஜின் வீட்டு வாசலிலே தவம் கிடந்து அவரது உதவியாளர் ஆனார். அவரிடம் தொழில் கற்ற இவர் தனது பெயரிலும் பாக்கியத்தை சேர்த்துக் கொண்டார்.

பின்னர் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் 'என்றும் அன்புடன்' என்ற படத்தை இயக்கினார். இதில் முரளி, சித்தாரா, ஹீரா, மனோரமா, ஜனகராஜ், சின்னி ஜெயந்த், சார்லி, செந்தில், பேபி மோனிஷா, மோகன் ராமன், சந்திரசேகர் உள்ளிட்ட பலர் நடித்தனர். படம் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்றது.

அடுத்ததாக ராதிகா மெயின் கதாபாத்திரத்தில் நடிக்க 'சித்ரசோலை' என்ற படத்தை இயக்கினார். அவரே நாயகனாகவும் நடித்தார். உயரம் குறைவான ஒருவனை ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு படம் அவஸ்தைகளை காமெடியாக சொல்லி உருவான படம். ஆனால் இந்த படம் பின்னர் கைவிடப்பட்டுவிட்டது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான 'நெஞ்சினிலே' படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதினார். சில படங்களுக்கு பாடல்கள் எழுதினார். அதன்பிறகு சினிமாவை விட்டு விலகிச் சென்று விட்டார். பல வருடங்களுக்கு பிறகு அவர் மாரடைப்பால் சொந்த ஊரில் மரணமடைந்த செய்தி வெளியானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !