உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 2026ல் 100 கோடி வசூல் பெற்ற 9வது படம் 'ஓ.ம்'

2026ல் 100 கோடி வசூல் பெற்ற 9வது படம் 'ஓ.ம்'

2026ம் ஆண்டில் இந்த வாரம் நவம்பர் 27ம் தேதி வெளியாக உள்ள 13 படங்களையும் சேர்த்தால் இந்த வருடத்திய படங்களின் எண்ணிக்கை 200ஐக் கடந்துவிடும்.

இதுவரையில் வெளியான 190 படங்களில் 9 படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ள படங்களாக இருக்கின்றன. 100 கோடி கிளப் பட்டியலில் 9வது படமாக கடந்த வாரம் வெளியான 'ஓ.ம்' படம் இடம் பிடித்துள்ளது. மூன்று நாட்களில் இந்த சாதனையைப் புரிந்துள்ளது.

இந்த வருடத்தில் அதிகபட்சமாக 'ஜெயிலர் 2' படம் 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாவது இடத்தில் 'ஜனநாயகன்' படம் உள்ளது. இரண்டு படங்களின் வசூல் நிலவரமும் தகவலாக வந்தவை.

அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட வசூலில் 'கருப்பு, சீன், விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மண்டாடி, டிசி, பராசக்தி' ஆகிய படங்கள் 100 கோடி வசூல் கடந்த படங்களாக உள்ளன.

நவம்பர் மாதத்தில் வெளியான படங்களான 'சீன், ஓ.ம்' ஆகிய படங்கள் 100 கோடி வசூலைக் கடந்துள்ளன என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !