உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 20 ஆண்டுகள் 124 படங்கள் : ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

20 ஆண்டுகள் 124 படங்கள் : ஜி.வி.பிரகாஷ் நெகிழ்ச்சி

ஷங்கர் இயக்கத்தில் வசந்தபாலன் நடிப்பில் பரத், பாவனா நடித்த ‛வெயில்' படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனவர் ஜி.வி.பிரகாஷ். டிசம்பர் 8ம் தேதி, 2006ம் ஆண்டு வெயில் ரிலீஸ் ஆனது. அந்தவகையில் அடுத்த மாதம் அவர் சினிமாவில் 20வது ஆண்டை நிறைவு செய்கிறார்.

இது குறித்து பேசியுள்ள ஜி.வி.பிரகாஷ், ‛‛இதுவரை பல மொழிகளில் 124 படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இந்த ஆண்டு நல்ல ஆண்டாக அமைந்தது. யூத், இருமுடி, விஸ்வநாத் அண்ட் சன்ஸ், மண்டாடி என பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இப்போது நல்ல கதை அம்சம் கொண்ட ஆகாயத்தில் ஒரு தாரகை படத்துக்கு இசையமைத்து இருக்கிறேன். துல்கர் சல்மான் நடித்து இருக்கிறார். இந்த படத்தின் கதையை பார்த்து நானே தமிழகத்தில் படத்தை வினியோகம் செய்ய நினைத்தேன். அது நடக்கவில்லை.

நான் இசையை விரும்புவேன். சிலசமயம் அமைதியை விரும்புவேன். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும்போது பலர் இசை கேட்பார்கள், நான் அமைதியை தான் விரும்புவேன். காரில் உட்கார்ந்து இருக்கும்போது எம்.எஸ்.வி., இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் பாடல்களை விரும்பி கேட்டேன். நான் இசையமைத்த பாடல்களில் இன்றும் வெயிலோடு விளையாடி பாடல் மறக்க முடியாதது. அதுதான் நான் இசையமைத்த முதல் பாடல். எப்படி வருமோ என பயந்தேன். முத்துகுமார் தனியாக வரிகளை எழுதி வைத்து இருந்தார். அதுவும், என் ட்யூனும் செட்டானது. சினிமாவுக்கு வராவிட்டால் கிரிக்கெட்டர் ஆகி இருப்பேன். அன்புடன் மகி படத்தில் கிரிக்கெட் வீரராக நடிக்கிறேன். கம்யூட்டர் கோடிங் நன்றாக வரும். ஒருவேளை கம்யூட்டர் இன்ஜினியர் ஆகி இருக்கலாம். இசை தவிர, படத்தில் நடித்தும் வருகிறேன்'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !