உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / யுஏ சான்றிதழ் பெற்ற 'ஓம்'

யுஏ சான்றிதழ் பெற்ற 'ஓம்'

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், சாய் அபயங்கர் இசையில், தனுஷ், மம்முட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா மற்றும் பலர் நடிப்பில் உருவான 'ஓம்' படம் இந்த வாரம் நவம்பர் 20ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்திற்கான தணிக்கை சான்றிதழ் நேற்று நவம்பர் 16ம் தேதியன்று வழங்கப்பட்டுள்ளது. படத்திற்கு 'யுஏ 16 +' சான்றிதழை வழங்கியுள்ளார்கள். படம் 2 மணி நேரம் 58 நிமிடங்கள் கால அளவாக இருக்கிறது.

இந்த வருடத்தில் வெளியான சில முக்கியப் படங்களான, 'ஜனநாயகன்' படம் 3 மணி நேரம் 3 நிமிடம், 'ஜெயிலர் 2' படம் 2 மணி நேரம் 45 நிமிடம், 'பராசக்தி' படம் 2 மணி நேரம் 42 நிமிடம், 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 2 மணி நேரம் 41 நிமிடம், என்ற கால அளவில் இருந்தன.

'ஓம்' படம் 'ஜனநாயகன்' படத்திற்கு அடுத்து அதிக நேரம் கொண்ட படமாக உள்ளது. படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதால் இன்று முதல் முன்பதிவு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !