உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரொமாண்டிக், காமெடி கதையில் உருவாகும் துல்கர் சல்மானின் அடுத்த தெலுங்கு படம்

ரொமாண்டிக், காமெடி கதையில் உருவாகும் துல்கர் சல்மானின் அடுத்த தெலுங்கு படம்

மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான துல்கர் சல்மான், தெலுங்கில் நடித்த சீதா ராமம், லக்கி பாஸ்கர் படங்களுக்கு பிறகு டோலிவுட்டில் மார்க்கெட்டை பிடித்தார். தற்போது, ஆகாசம்லோ ஒக தாரா என்ற உணர்வுப்பூர்வமான படத்தில் நடித்து முடித்துள்ளார். பவன் சாதினேனி இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 20-ம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து மற்றுமொரு நேரடி தெலுங்குப் படத்தில் துல்கர் சல்மான் நடிக்கவுள்ளார். தற்போதைய தகவலின்படி, இப்படம் ஒரு ரொமாண்டிக் காமெடி பொழுதுபோக்குப் படமாக உருவாகவுள்ளதாகவும், இதனை தீபக் ரெட்டி இயக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுதவிர, ஸ்ரீ ஸ்ரீ என்ற மற்றொரு தெலுங்கு காதல் படத்திலும் துல்கர் சல்மான் நடித்து வருகிறார். ரவி நெலகுடிட்டி இயக்கும் இப்படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !