உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராமாயணா ஒரே வாரத்தில் ரூ.900 கோடி வசூல்

ராமாயணா ஒரே வாரத்தில் ரூ.900 கோடி வசூல்

நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யாஷ் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் நவம்பர் 5ம் தேதி தீபாவளியை முன்னிட்டு வெளியான ஹிந்திப் படம் 'ராமாயணா'. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் டப்பிங் ஆகி வெளியானது.

படம் வெளியாகி ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் உலக அளவில் மொத்தமாக 900 கோடிக்கும் அதிகமான வசூலை இப்படம் பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் 610 கோடியும், வெளிநாடுகளில் 320 கோடியும் என மொத்தமாக 930 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல். படம் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு நாளும் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. திங்கள்கிழமை மட்டும் 160 கோடி வசூலித்துள்ளது.

இதுவரையில் வெளியான இந்தியத் திரைப்படங்களில் ஒருவார வசூலில், 'புஷ்பா 2' படம் 1000 கோடிகளுடன் முதலிடத்திலும், 'துரந்தர் 2' படம் 980 கோடிகளுடன் இரண்டாமிடத்திலும் உள்ளன. 930 கோடிகளுடன் மூன்றாமிடத்தை 'ராமாயணா' படம் பெற்றுள்ளது. அதற்கடுத்த இடங்களில் 840 கோடிகளுடன் 'பாகுபலி 2' படம் நான்காவது இடத்திலும், 'கேஜிஎப் 2' படம் 720 கோடிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !