உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மாத்ருபூமி டிரைலர் வெளியீடு : டிச., 4ல் படம் ரிலீஸ்

மாத்ருபூமி டிரைலர் வெளியீடு : டிச., 4ல் படம் ரிலீஸ்

அபூர்வா லக்கியா இயக்கத்தில் சல்மான்கான் நடித்துள்ள ஹிந்தி படம் ‛மாத்ருபூமி'. லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய - சீன ராணுவ வீரர்களின் மோதல் பின்னணியில் இப்படம் உருவாகி உள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு ‛கல்வான் பேட்டில்' என பெயர் வைத்திருந்தனர். இதற்கு எதிர்ப்பு கிளம்ப மாத்ருபூமி என பெயரை மாற்றினர். ராணுவம் தொடர்புடைய படம் என்பதால் பலகட்ட ஆய்வுக்கு உட்படுத்தி தற்போது தணிக்கைக்கான வேலைகள் துவங்கி உள்ளன.

இந்நிலையில் இதன் டிரைலரை வெளியிட்டுள்ளனர். 4:35 நிமிடங்கள் ஓடும் இந்த டிரைலரில் சீன வீரர்கள் அத்துமீறி உள்ளே நுழைய முயல்வது, அவர்களை சல்மான் எச்சரிப்பது. பின்னர் இருதரப்பு இடையேயான மோதல் உள்ளிட்டவைகளுடன் ராணுவ வீரர்களின் குடும்பம், அவர்களது நாட்டுப்பற்று உள்ளிட்ட விஷயங்களும் டிரைலரில் இடம் பெற்றுள்ளன. டிரைலர் வெளியான 19 மணிநேரத்தில் 21 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன. அதோடு படம் டிச., 4ல் ரிலீஸ் என அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !