மெகா நடிகர்கள் இணையும் படம்: பின் வாங்கிய தயாரிப்பு நிறுவனம்
ADDED : 4 hours ago
நீண்ட இடைவெளிக்கு பின், உச்ச நடிகரும், உலக நடிகரும் இணைந்து நடிக்க உள்ளனர். ஆனால், அவர்கள் நடிக்கும் படத்தை, 'மெகா பட்ஜெட்'டில் தான் தயாரிக்க வேண்டியிருக்கும். அப்படி தயாரிக்கும் பட்சத்தில், இப்படத்தை அதிகப்படியான விலைக்கு விற்றால் தான், போட்ட பணத்தை எடுக்க முடியும் என்ற சூழல் உள்ளது.
இதனால், தற்போது தமிழ்நாட்டில் ஆட்சி மாறிய காரணத்தால், இப்படத்தைத் தயாரிக்கவிருந்த, முந்தைய ஆட்சியாளரின் பட நிறுவனம் பின்வாங்கியுள்ளது. இதனால், இப்படத்தைத் தயாரிக்க, புதிய நிறுவனங்களுடன் இரண்டு மெகா நடிகர்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.