உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லாஸ் ஏஞ்சலஸில் ராமாயணா படம் சிறப்பு காட்சி திரையிடல் : ஆங்கில பதிப்பு 25 நிமிடங்கள் குறைவு

லாஸ் ஏஞ்சலஸில் ராமாயணா படம் சிறப்பு காட்சி திரையிடல் : ஆங்கில பதிப்பு 25 நிமிடங்கள் குறைவு

ராமாயணா : ரைஸ் ஆப் ஏ லெஜண்ட் படத்தின் உலகளாவிய திரையிடல் இன்று லாஸ் ஏஞ்சலஸில் நடைபெற்றது. அகாடமி மியூசியம் ஆப் மோஷன் பிக்சர்ஸில் உள்ள டேவிட் கெபென் திரையரங்கம் ரசிகர்களால் நிறைந்திருந்தது. மேலும் படத்தின் முக்கிய குழுவினரும் கலந்து கொண்டனர்.

திரையரங்கில் ஆங்கிலத்தில் டப் செய்யப்பட்ட 3D பதிப்பு திரையிடப்பட்டது. மூல ஹிந்தி பதிப்பை விட இது சுமார் 25 நிமிடங்கள் குறைவான ஓடும் நேரத்தைக் கொண்டுள்ளதாகப் பார்த்தவர்கள் தெரிவித்தனர். ஹிந்தி பதிப்பு மூன்று மணி நேரத்திற்கு மேல் ஓடக்கூடியது, ஆனால் ஆங்கில பதிப்பு அதைவிடக் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

தயாரிப்பாளர்கள் ஆங்கிலப் பதிப்பிலிருந்து சில பாடல்களை நீக்கி உள்ளனர். அதுவே இந்த நேர வேறுபாட்டிற்குக் காரணம் என்கிறார்கள். நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இந்த இந்திய காவியத் திரைப்படத்தை நமித் மல்ஹோத்ரா மற்றும் நடிகர் யஷ் தயாரித்துள்ளனர். ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளனர். இப்படம் வருகிற நவம்பர் 5ம் தேதி அன்று திரைக்கு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !