உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நடிகைகளுக்கு மனநிறைவு: ஸ்ரீதேவி அப்பல்லா

நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நடிகைகளுக்கு மனநிறைவு: ஸ்ரீதேவி அப்பல்லா


இந்த வாரம் வெளியான ஒரே படம் 'ஹைக்கூ'. இந்த படத்தின் மூலம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்திருக்கிறார் ஸ்ரீதேவி அப்பல்லா. தமிழ் அறிமுகம் குறித்து அவர் கூறியதாவது:

'ஹைக்கூ' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. எனது நடிப்பிற்காக பாராட்டு கிடைத்து வருவது கூடுதல் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. படப்பிடிப்பு முடிந்த பிறகும் சில கதாபாத்திரங்கள் நடிகர்களின் மனதை விட்டு எளிதில் நீங்குவதில்லை. அந்த வகையில் இந்த படத்தின் கேரக்டர் எனக்கு அமைந்துள்ளது. தெலுங்கில் அறிமுகமான 'கோர்ட்: ஸ்டேட் வெர்சஸ் நோபடி' படத்தின் கேரக்டரும் எனக்கு அப்படி அமைந்தது.

'ஹைக்கூ' படத்தில் என்னுடைய கதாபாத்திரம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என எதிர்பார்த்தேன். நான் எதிர்பார்த்தது போலவே, படத்தின் முன்னோட்டக் காட்சிகளிலேயே, ரசிகர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு நடிகையாக நம் பணியை ரசிகர்கள் கொண்டாடுவதுதான் நமக்கு மனநிறைவு தரும். அந்த உணர்வை 'ஹைக்கூ' திரைப்படம் வெளியாவதற்கு முன்பும் வெளியான பின்பும் கொடுத்திருக்கிறது.

சில நாட்களில் படப்பிடிப்பை முடித்துவிட்டு வீட்டுக்குத் திரும்பினாலும், டப்பிங் பணிகளை முடித்த பிறகும்கூட அந்தக் கதாபாத்திரத்திலிருந்து என்னால் எளிதாக வெளிவர முடியவில்லை. அந்தக் கதாபாத்திரத்தை இன்னும் என்னுள் சுமந்து கொண்டிருக்கிறேன். அந்த வகையில், 'ஹைக்கூ' திரைப்படத்தில் நடித்த அனுபவம் எனக்கு பொக்கிஷம். இந்த வாய்ப்பை எனக்கு கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் இயக்குநருக்கும் உடன் பணிபுரிந்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !