உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சுங்கத்துறை அதிகாரி இயக்கிய படத்தில் நடித்த ராதிகா

சுங்கத்துறை அதிகாரி இயக்கிய படத்தில் நடித்த ராதிகா

இந்திய வருவாய் பணி (ஐஆர்எஸ்) அதிகாரி தோ.சமயமுரளி எழுதி இயக்கி பின்னணி இசை அமைத்துள்ள படம், 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்'. ராதிகா முதன்மை கேரக்டரில் நடித்துள்ளார். அவருடன் ஜே.டி.சக்ரவர்த்தி, லால், சரண் சக்தி, பாலசரவணன், ஸ்மேஹா, காளி வெங்கட், ஜாபர் சாதிக், மைம் கோபி நடித்துள்ளனர். வரும் 30ம் தேதி வெளிவருகிறது. எஸ்.ஆர் ட்ரீம் ஸ்டுடியோஸ் சார்பில் எஸ்.ராம் பிரகாஷ் தயாரித்துள்ளார்.

படம் குறித்து இயக்குநர் தோ.சமயமுரளி கூறியதாவது: 2008ல் இந்திய வருவாய் பணி அலுவலர்கள் பிரிவில், சுங்கத்துறை அமலாக்கம் மற்றும் மறைமுக வரிவிதிப்பு துறைகளில் பணியாற்றினேன். நான் விசாரித்த சுங்கத்துறை வழக்குகளை அடிப்படையாக கொண்ட படம் இது. கடத்தல், நிழல் உலகம், சுங்கத்துறையின் செயல்பாடுகள் குறித்து மக்களுக்கு சொல்வதுடன், நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் குற்றத்தடுப்பு பணிகளில் சுங்கத்துறை வகிக்கும் பங்கு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம் என்றார்.

மூத்த ஐஆர்எஸ் அதிகாரியான தோ.சமய முரளி, 'சுங்கம் : தி ஹெரிடேஜ் ஆப் சென்னை கஸ்டம்ஸ்', 'எனிமி ஆப் தி ஸ்மக்ளர்', 'காக்கி' உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்ளார். அவர் இயக்கிய முதல் குறும்படமான 'புதிய பார்வை', மும்பை சர்வதேச பட விழாவில் திரையிடப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !