உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தங்கள் குழந்தைக்கு தேவி என்று பெயர் வைத்த ரன்வீர், தீபிகா

தங்கள் குழந்தைக்கு தேவி என்று பெயர் வைத்த ரன்வீர், தீபிகா

பாலிவுட்டின் நட்சத்திர ஜோடியான ரன்வீர் சிங், தீபிகா படுகோனே தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. இரண்டாவது பெண் குழந்தை கடந்த மாதம் செப்டம்பர் 19ம் தேதியன்று பிறந்தது.

நேற்று விஜயதசமியை முன்னிட்டு தங்களது குடும்பப் புகைப்படத்தைப் பகிர்ந்து, “தேவி படுகோனே சிங்' எனப் பெயர் வைத்துள்ளதாக இருவரும் அறிவித்துள்ளனர். அவர்களது முதல் பெண் குழந்தைக்கு இரண்டு வயதாகிறது. அவரது பெயர் துவா படுகோனே சிங்.

ரன்வீர், தீபிகா இருவரும் அவர்களது குழந்தைக்கு பெயர் வைத்த அறிவிப்புப் பதிவை இன்ஸ்டாவில் நேற்று இரவு வெளியிட்டிருந்தனர். அப்பதிவிற்கு அதற்குள் 5.6 மில்லியன் லைக்குகள் கிடைத்துள்ளது. சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் குழந்தை தேவிக்கு வாழ்த்துகளைப் பதிவிட்டு வருகிறார்கள்.

ரன்வீர் சிங் தற்போது 'பிரலாய்' ஹிந்திப் படத்திலும், தீபிகா படுகோனே 'கிங்' ஹிந்திப் படத்திலும், 'ராக்கா' தெலுங்குப் படத்திலும் நடித்து வருகிறார்கள்.

ரன்வீர் நடித்து இந்த ஆண்டில் வெளிவந்த 'துரந்தர் தி ரிவெஞ்ச்' படம் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இந்த ஆண்டில் அதிக வசூலைப் பெற்ற இந்தியப் படமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !