கால்பந்தை மையப்படுத்தி உருவான ஆவணப்படத்திற்கு வாய்ஸ் கொடுத்த மம்முட்டி
கேரளத்தைப் பொருத்தவரை கால்பந்து விளையாட்டுக்கு ரசிகர்கள் மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பவர்கள். அந்த வகையில், தற்போது கேரளாவின் கால்பந்து மீதான காதலைப் பேசும் விதமாக 'பந்தடிக்காம்' என்கிற ஐந்து பாகங்களைக் கொண்ட ஆவணப்படம் உருவாகியுள்ளது. இன்று முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் இது வெளியாகிறது. இந்த ஆவணப்படத்திற்கு நடிகர் மம்முட்டி கதை சொல்பவராகக் குரல் கொடுத்துள்ளார்.
கேரளாவில் கால்பந்து என்பது மக்களை ஒன்றிணைக்கும் ஒரு உணர்வு என்று குறிப்பிட்டுள்ளார் மம்முட்டி. ஒரு விளையாட்டு ஆவணப்படத்திற்கு அவர் குரல் கொடுப்பது இதுவே முதன்முறையாகும். இந்த ஆவணப்படம், வெறும் கால்பந்து போட்டியை மட்டும் காட்டாமல், அது மக்களின் கலாச்சாரத்தோடு எப்படிப் பின்னிப் பிணைந்துள்ளது, உள்ளூர் கிளப் போட்டிகள், சந்தோஷ் கோப்பை நினைவுகள் முதல் பிரேசில், அர்ஜென்டினா அணிகளுக்கான தீவிரமான ஆதரவு வரை விவரிக்கிறது.