உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் உலக அளவில் முதலிடம் பிடித்த ரவிதேஜாவின் 'இருமுடி'

ஓடிடியில் உலக அளவில் முதலிடம் பிடித்த ரவிதேஜாவின் 'இருமுடி'


சிவா நிர்வாணா இயக்கத்தில், ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள படம் இருமுடி. இப்படத்தில் பிரியா பவானி சங்கர், பேபி நக்ஷத்ரா, சாய் குமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளியான இப்படம் 250 கோடி வசூலித்தது.

இந்நிலையில் இருமுடி படம் செப்டம்பர் 18ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி தற்போது நெட்பிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 பட்டியலில், ஆங்கிலம் அல்லாத திரைப்படங்கள் பிரிவில் உலகளவில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது.

தரவுகளின்படி, கடந்த ஏழு நாட்களில் இருமுடி படம் 3.4 லட்சம் பார்வைகளைப் பெற்று உலகளவில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஓடிடி வெளியீட்டின் முதல் மூன்று நாட்களிலும் இப்படம் இதே 3.4 லட்சம் பார்வைகளைப் பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கடந்த வாரம் இருமுடி படம் 3வது இடத்தில் இருந்தது. ஆனால் இப்போது இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த வாரம் முதலிடத்தில் இருந்த சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்தைப் பின்னுக்குத் தள்ளி இந்த சாதனையைப் படைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !