வாசகர்கள் கருத்துகள் (1)
அவர் இசை மட்டும் பார்த்தால் எல்லொருக்கும் நன்மை! புலி பார்த்து பூனை சூடு போட்ட மாதிரி ஜி வி கிலியுது இவரும் ஏன் பாவம் ! !!
ஹிப்ஹாப் ஆதி நடித்த 'வீரன், பி.டி சார், சிவகுமாரின் சபதம், நான் சிரித்தால், கடைசி உலகப் போர்' ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை. குறிப்பாக, கடைசி உலகப் போர் பெரிய தோல்வி படமாக இருந்தது. அதனால், ஒரு ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார் ஆதி.
இந்நிலையில் கடந்த வாரம் அவர் நடிப்பு, இயக்கத்தில் வந்த 'மீசைய முறுக்கு 2' படம் ஓரளவு பிக்கப் ஆகி உள்ளது. இதனால் படத்தை இன்னும் ஓட வைக்க தமிழகம் முழுக்க தியேட்டர் விசிட் அடித்து வருகிறார் ஆதி. சென்னையில் நாளை படத்தின் நன்றி அறிவிப்பும் நடக்க உள்ளது. தான் நடித்த மீசையமுறுக்கு 2 வெற்றி படம் என்பதை பதிவு செய்ய இப்படி ஆதி களம் இறங்கியிருப்பதாக தகவல்.
இந்த வாரம் விஜய்சேதுபதி நடித்த 'பத்தா', ஜேசன் சஞ்சய் இயக்கிய 'சிக்மா', அசோக் செல்வனின் 'அன்பில் அவன்', ராம் இயக்கிய 'ஏழு கடல் ஏழு மலை', மற்றும் பஹத் பாசிலின் 'டோண்ட் டிரபிள் த டிரபிள்' மற்றும் 'கிட்டி' ஆகிய 6 படங்கள் வெளியாக உள்ளது. இதை தாண்டி ஹிப்ஹாப் ஆதி படம் ஓடுமா? ஓரளவு லாபத்தை தருமா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.
அவர் இசை மட்டும் பார்த்தால் எல்லொருக்கும் நன்மை! புலி பார்த்து பூனை சூடு போட்ட மாதிரி ஜி வி கிலியுது இவரும் ஏன் பாவம் ! !!