உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / திருமணத்திற்காக மிரட்டும் பிரியமான நடிகையின் காதலர்

திருமணத்திற்காக மிரட்டும் பிரியமான நடிகையின் காதலர்


சினிமாவுக்கு வருவதற்கு முன்பே, ஒருவரை காதலித்து வந்த, நீண்ட பெயர் கொண்ட அந்த பிரியமான நடிகைக்கு, தற்போது சினிமாவில் நிலைத்து நிற்க வேண்டும் என்ற ஆர்வம் மேலோங்கியுள்ளது. ஆனால், அவரது காதலரோ, வயதாகிக் கொண்டே செல்வதால், 'நாம் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும்...' என்று அம்மணியைத் துரத்துகிறார். இருப்பினும், அவருக்குப் பிடிகொடுக்காமல் நழுவி வரும் நடிகை, 'இப்போதைக்கு அதற்கு வாய்ப்பில்லை. வேண்டுமானால் வேறு பெண்ணை திருமணம் செய்து கொள்...' என்று காதலருக்கு, 'ஷாக்' கொடுத்து விட்டார்.

இதன் காரணமாக, '10 ஆண்டுகளுக்கு மேலாக என்னைக் காதலித்துவிட்டு, இப்போது சினிமா மோகத்தில் என்னை கழற்றிவிட நினைப்பதா?' என்று நடிகையுடன் மோதலில் ஈடுபடுவதோடு, 'ஆறு மாதத்தில் கல்யாணத்திற்கு சம்மதிக்காவிட்டால், கடத்திச் சென்று கழுத்தில் தாலி கட்டுவேன்...' என்று நடிகைக்கு மிரட்டல் விடுத்துள்ளார், காதலர். இதனால், தற்போது துப்பாக்கி ஏந்திய, 'செக்யூரிட்டி'யுடன் படப்பிடிப்புத் தளங்களுக்கு வரத் துவங்கியிருக்கிறார், நடிகை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !