உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மம்முட்டியின் 75வது பிறந்த நாளில் வெளியான 'ஓம்' படத்தின் 2வது டீசர்!

மம்முட்டியின் 75வது பிறந்த நாளில் வெளியான 'ஓம்' படத்தின் 2வது டீசர்!


'அமரன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தற்போது தனுஷ்-மம்முட்டி இணைந்து நடித்து வரும் படம் 'ஓம்'. சாய்பல்லவி, ஸ்ரீ லீலா நாயகிகளாக நடித்துள்ளனர். மம்முட்டியின் 75வது பிறந்த நாளான இன்று ஓம் படத்தின் 2வது டீசர் வெளியாகி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மம்முட்டியின் ஸ்டைலான தோற்றம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. இந்த டீசரில் ஒரு கடத்தல்காரராக நடித்துள்ள மம்முட்டியின் தோற்றம், ஆடை அலங்காரம் மற்றும் வசனம் பேசும் விதம் ஆகியவை மிகச் சிறப்பாக அமைந்துள்ளன.

மேலும், தனுஷ் மற்றும் மம்மூட்டிக்கு இடையேயான கெமிஸ்டரி மற்றும் தீவிரமான நடிப்பின் ஒரு சிறிய பார்வையை இந்த டீசர் வழங்குகிறது. அவர்கள் இருவரும் ஒன்றாக மாஸாக என்ட்ரி கொடுக்கும் இறுதிக் காட்சி ரசிகர்களுக்குப் பெரிய விருந்தாக அமையும். சாய் அபயங்கரின் பின்னணி இசை காட்சிகளுக்கு கூடுதல் பலத்தை சேர்த்து, டீசரை மேலும் வலுவாக்குகிறது.
ராஜ்குமார் பெரியசாமியின் இயக்கம் மற்றும் இரண்டு மாபெரும் நடிகர்களின் கூட்டணி ஆகிய காரணங்களால் ஓம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே உயர்ந்துள்ளது. இப்படம் 2026 அக்டோபர் 16ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !