உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பிளாஷ்பேக்: பாலிவுட்டுக்கு சென்ற வி.சேகர் படம்

பிளாஷ்பேக்: பாலிவுட்டுக்கு சென்ற வி.சேகர் படம்


தமிழ் சினிமாவில் குடும்ப பாங்கான படங்களை இயக்கியவர் வி.சேகர். கே.பாக்யராஜின் உதவியாளராக இருந்து பின்னர் 'எல்லோரும் ஹீரோதான்' என்ற படத்தின் மூலம் இயக்குனர் ஆனார். அந்த படம் அந்த காலட்ட சினிமா ஹீரோக்களை கிண்டல் செய்ததால் அடுத்த வாய்ப்பு வரவில்லை. பின்னர் பெரும் போராட்டத்திற்கு பிறகு குடும்ப பட இயக்குநர் ஆனார். தொடர்ந்து 'பொண்டாட்டி சொன்னா கேட்டுக்கணும்', 'பொறந்தவீடா புகுந்தவீடா', 'வரவு எட்டணா செலவு பத்தணா', 'காலம் மாறிப்போச்சு', 'விரலுக்கேத்த வீக்கம்', 'கூடி வாழ்ந்தால் கோடி நன்மை' உட்படப் பல குடும்பச் சித்திரங்களைத் தந்தார்.

வி.சேகர் இயக்கிய படங்களில் முக்கியமானது 'நான் புடிச்ச மாப்பிள்ளை'. இது 'கற்பகம்' படத்தின் தாக்கத்தில் உருவான படம் என்று சொல்லலாம். கற்பகம் படத்தின் மையபுள்ளியே மாமனார் எஸ்.வி.ரங்காராவிற்கும், மருமகன் ஜெமினி கணேசனுக்கும் இருந்த நட்புதான். அதேபோல இந்த படத்தில மாமனார் ஜனகராஜ§க்கும் மருமகன் நிழல்கள் ரவிக்கும் இருந்த நட்புதான் படத்தின் மைய கதை.

'நான் புடிச்ச மாப்பிள்ளை' படத்தில் ஜனகராஜின் மகள் சரண்யாவை, நிழல்கள் ரவி திருமணம் செய்வதாகவும் சரண்யா இறந்தபிறகு அவர் கவுண்டமணி மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்து வாழ்வதாகவும் கதை நகரும். ஒரே மகளை இழந்த ஜனகராஜை நிழல்கள் ரவி வீட்டோடு மாமனாராக வைத்துக் கொள்வதும் அதனால் ஏற்படும் பிரச்னைகளுமே படத்தின் கதை.

இந்த படம் 'மெஹர்பான்' என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. ரவி சங்கர் இயக்கிய இந்தப் படத்தில் அனுபம்கேர் மாமனாராகவும், மிதுன் சக்ரவர்த்தி மருமகனாகவும் நடித்தனர். சரண்யா நடித்த கேரக்டரில் சாந்திப்ரியா நடித்தார். தெலுங்கில் 'மாமாகாரு' என்ற பெயரிலும், 'முத்தின மாவா' என்ற பெயரில் கன்னடத்திலும் ரீமேக் ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !