உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / கிர்த்தி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம் : கடுமையாக சாடிய கங்கனா

கிர்த்தி சனோனின் ரக்ஷா பந்தன் விளம்பரம் : கடுமையாக சாடிய கங்கனா

பாலிவுட் நடிகை கிர்த்தி சனோன் நடித்துள்ள புதிய ரக்ஷா பந்தன் விளம்பரம் சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு ஒரு பிரபல பிராண்டிற்காக அவர் நடித்துள்ள இந்த விளம்பரத்தில் கவர்ச்சிகரமான ஆடையில் தோன்றியுள்ளார்.

இந்த விளம்பரம் நெட்டிசன்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரக்ஷா பந்தன் பண்டிகையின் உணர்வுபூர்வமான மற்றும் பாரம்பரிய பின்னணிக்கு, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள ஆடை வடிவமைப்பு மற்றும் சித்தரிப்பு சிறிதும் பொருந்தவில்லை. முக்கியமாக இது ஆபாசமாக உள்ளது. ஒரு குடும்பப் பண்டிகைக்கு இத்தகைய கவர்ச்சி ஆடை தேவையா என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். மேலும், அந்த விளம்பரத்தில் அவர் தனது வளர்ப்பு நாய்க்கும் ராக்கி கயிறு கட்டுவது போலக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது, பாரம்பரியத்தை கொச்சைப்படுத்துவது போல் உள்ளது என்றும் நெட்டிசன்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது குறித்து நடிகையும் எம்.பி-யுமான கங்கனா ரணாவத் கூறும்போது, ஒருவர் தனது சகோதரனுக்கு ராக்கி கட்டும்போது ஏன் பிகினி அல்லது உள்ளாடை போன்ற ஆடையை அணிய வேண்டும்? இது வேண்டுமென்றே விசித்திரமாக எடுக்கப்பட்டது போல் தெரிகிறது என்று கடுமையாக சாடியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !