டிக்கெட் கட்டணங்களை உயர்த்திய தெலுங்கானா அரசு
இந்தியாவில் அதிக அளவில் சினிமா தியேட்டர்களுக்கு ரசிகர்களை வரவழைக்கும் மாநிலங்களாக தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலுங்கானா இருக்கிறது.
அங்கு புதிய படங்கள் வெளியானால் ஒரு வார காலத்திற்கு டிக்கெட் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அரசு அனுமதி அளிக்கிறது. இந்நிலையில் தற்போதைய வழக்கமான டிக்கெட் கட்டணங்களை உயர்த்தி தெலுங்கானா மாநில அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
அதன்படி மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிக பட்சமாக 300 ரூபாய் கட்டணமும், ஸ்பெஷல் தியேட்டர்களில் 300 ரூபாய், ஏசி தியேட்டர்களில் 200 ரூபாய், ஏசி அல்லாத தியேட்டர்களில் 100 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் சவுண்ட் 7.1, 2கே மற்றும் 4கே புரொஜக்ஷன், ஐமேக்ஸ் மற்றும் 75 அடிக்குமேற்பட்ட தியேட்டர்களுக்கு ஸ்பெஷல் தியேட்டர்கள் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வால் தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாக கருத்து எழுந்துள்ளது.