'லைட்வெயிட் பேபி!' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு
ADDED : 12 hours ago
ஸ்டாண்ட் -அப் காமெடியன் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் பிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடிக்கும் தமிழ் ரொமான்டிக் திரைப்படம் லைட் வெயிட் பேபி (Light Weight Baby). கே.சி. குரு எழுதி, இயக்கியுள்ள இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சென்னை, பெங்களூரூ மற்றும் மைசூர் ஆகிய நகரங்களில் நான்கு கட்டங்களாக வெறும் 45 நாளில் படப்பிடிப்பை நடத்தி முடித்தனர்.
இந்த நிலையில் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. பிட்னஸ் உலகை பின்னணியாகக் கொண்டிருந்தாலும், வெவ்வேறு உலகங்களில் இருந்து வரும் இரு நபர்களின் உறவை, காதல், நகைச்சுவை, குடும்ப எதிர்பார்ப்புகள் மற்றும் தனிப்பட்ட லட்சியங்களுடன் இணைத்து இப்படம் சொல்லவுள்ளது.