உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ராம் இன் லீலா' தலைப்பு மாற்றம்

'ராம் இன் லீலா' தலைப்பு மாற்றம்


'ஆண்பாவம் பொல்லாதது' படத்திற்கு பிறகு ரியோ ராஜ் நடிப்பில் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஒய்பா என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் தயாரித்துள்ள படம் 'ராம் இன் லீலா'. இந்தப் படத்தில் வர்திகா ஜெயின் நாயகியாக நடித்துள்ளார். ராமசந்திரன் கண்ணன் இயக்கி இருக்கும் இந்தப் படத்துக்கு மல்லிகா அர்ஜூன் ஒளிப்பதிவு செய்ய, அன்கிட் மேனன் இசை அமைத்துள்ளார்.

இந்த படம் தணிக்கைக்காக சென்ற போது, 'ராம் இன் லீலா' என்பது இந்து மதக் கடவுளின் பெயரைக் குறிக்கிறது. காதல் படத்திற்கு இந்த தலைப்பிற்கான அவசியம் இல்லை. இது தேவையற்ற பிரச்னைகளை உருவாக்கும் அதனால் தலைப்பை மாற்றினால்தான் சான்றிதழ் தர முடியும் என்று கூறிவிட்டார்கள்.

இதனால் படத்தின் தலைப்பு 'ராம் அண்ட் லீலா' என்று மாற்றப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட தணிக்கை குழு படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளது. இதனால் படம் வருகிற 21ம் தேதி வெளிவருவது உறுதியாகி உள்ளது.

இந்த பெயர் மாற்றம் குறித்து தயாரித்து தரப்பு தனது சமூக வலைதள பக்கத்தில் 'மின்னல விழுங்கி 'யுஏ'வ கொப்பளிச்சாச்சு” என்று கிண்டலாக பதிவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !