உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஒரே ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் மாறிவிடும் : யஷ்

ஒரே ஒரு வெள்ளிக்கிழமை எல்லாம் மாறிவிடும் : யஷ்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள படம் டாக்சிக். அவருடன் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹுமா குரோஷி, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படம் வருகிற 26ம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தை சர்வதேச அளவில் ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது. அதனால் படத்தை பெரிய அளவில் புரொமோஷன் செய்கின்றனர்.

இந்நிலையில், ஹிந்தி நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற யஷிடம், அல்லு அர்ஜுன், ராம் சரண் மற்றும் விஜய் போன்ற நடிகர்களுக்கு ஆரம்பத்தில் கிடைக்காத பான்-இந்தியா ஸ்டார் என்ற அடையாளம் உங்களுக்கு மட்டும் எப்படி சாத்தியமானது? என்று கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த யஷ், ஒரே ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும். ஒரு படம் சரியாக ஓடவில்லை என்றால் இந்த பான்-இந்தியா என்ற அடையாளமும் காணாமல் போய்விடும் என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !