உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ்

7 ஆண்டுகளுக்குப் பிறகு இன்ஸ்டா டிபியை மாற்றிய பிரபாஸ்

இந்தியாவின் முன்னணி பான் இந்தியா நடிகரான பிரபாஸ், தற்போது பௌசி படத்தின் படப்பிடிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதையடுத்து இடைவெளியின்றி ஸ்பிரிட் படப்பிடிப்பிற்கும் செல்லவுள்ளார். க நடிகர்களுக்கும் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களுக்கும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்து, அவர்களை ஊக்குவிப்பதில் பிரபாஸ் எப்போதும் முன்னணியில் இருப்பவர்.

தற்போது அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு முக்கியமான மாற்றம் நடந்துள்ளது. சுமார் 7 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரபாஸ் தனது டிபியை மாற்றியுள்ளார். இது அவரது வரவிருக்கும் படமான பௌசி படத்தின் புகைப்படமாகும். இப்படத்தின் தயாரிப்புப் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிரபாஸ் தனது டிபியாக இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டரை வைத்துள்ளார். இதனால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு இப்படத்தைப் பற்றிய முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்றும் பிரபாஸ் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஹனு ராகவபுடி இயக்கும் இப்படத்தில் இமான்வி கதாநாயகியாக நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !