உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஏழு வருடத்திற்கு பிறகு 'கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்

ஏழு வருடத்திற்கு பிறகு 'கும்பலாங்கி நைட்ஸ்' இயக்குனரின் புதிய படம் பூஜையுடன் துவக்கம்

மலையாளத்தில் கடந்த 2019-ல் பஹத் பாசில் வில்லத்தனம் வாய்ந்த கதாபாத்திரத்தில் நடித்த 'கும்பலாங்கி நைட்ஸ்' திரைப்படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நடித்த அன்னா பென், ஸ்ரீநாத் பாசி, மேத்யூ தாமஸ், சவ்பின் சாஹிர் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து மலையாள திரையுலகில் பிரபலமானார்கள். இந்த படத்தை இயக்கிய மது சி. நாராயணன், கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் அடுத்ததாக படம் இயக்கவே இல்லை.

இந்த நிலையில், தற்போது 'பிரேமலு மற்றும் லோகா' படங்களின் ஹீரோ நஸ்லேனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்க உள்ளார் என கடந்த மாதமே தகவல் வெளியானது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு கொச்சியில் அதிகாரப்பூர்வமான பூஜையுடன் துவங்கியுள்ளது. கும்பலாங்கி நைட்ஸ் படத்தில் இடம்பெற்ற நடிகர் சவ்பின் சாகிர் இந்த படத்திலும் முக்கிய இடத்தில் நடிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !