உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள்

ஹாலிவுட் 2026 : 1000 மில்லியன் வசூல் கடந்த 4 படங்கள்


2026ம் ஆண்டு சினிமாவைப் பொறுத்தவரையில் தமிழ் சினிமாவில் இன்னும் அதிகமான வசூல் படங்கள் வரவில்லை. இதுவரையில் கடந்து போன 7 மாதங்களில் 'கருப்பு, ஜனநாயகன்' ஆகிய இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்துள்ளன. மற்ற படங்கள் 100 கோடிக்கும் குறைவான வசூலைத்தான் பெற்றுள்ளன.

இந்திய சினிமாவைப் பொறுத்தவரையில், ஒரே ஒரு ஹிந்திப் படம் 1000 கோடி வசூலைக் கடந்துள்ளது. 'துரந்தர் 2' படம் 1800 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. அதற்கடுத்து 500 கோடி வசூலில் ஒரு படம் கூட இல்லை. 'பார்டர் 2' ஹிந்திப் படம் 450 கோடி வசூலித்துள்ளது.

தெலுங்குப் படங்களான 'பெத்தி, மனஷங்கர் வரபிரசாத் காரு' ஆகிய இரண்டு படங்கள் 300 கோடி வசூலைக் கடந்துள்ளன. இதர படங்கள் 300 கோடிக்கும் குறைவாகவே வசூலித்துள்ளன.

உலக சினிமாவில் நமக்கு அதிகம் தெரிந்த ஹாலிவுட் படங்களில் இதுவரையில் 4 படங்கள் 1000 மில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளன.

“ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே, டாய் ஸ்டோரி 5, மைக்கேல், தி சூப்பர் மரியோ கேலக்ஸி மூவி' ஆகிய 4 படங்கள்தான் அந்த 1000 மில்லியன் வசூலைப் பெற்ற படங்கள். இவற்றில் 'ஸ்பைடர்மேன்' படம் மட்டும் தற்போது 1188 மில்லியன் வசூலைக் கடந்துள்ளது. ஒரு வாரத்தில் கிடைத்த வசூல் இது. இந்த வசூல் இன்னும் அதிகமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !