உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லக்கி பாஸ்கர் 2 எப்போது ? : வெங்கி அட்லூரி தகவல்

லக்கி பாஸ்கர் 2 எப்போது ? : வெங்கி அட்லூரி தகவல்

தனுஷ் நடித்த வாத்தி படத்தை இயக்கிய வெங்கி அட்லூரி, அதைத் தொடர்ந்து கடந்த 2024-ல் துல்கர் சல்மான் நடிப்பில் 'லக்கி பாஸ்கர்' என்கிற படத்தை இயக்கினார். தற்போது சூர்யாவை வைத்து அவர் இயக்கியுள்ள 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம், லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் எப்போது எடுக்கப் போகிறீர்கள்? எனக் கேட்கப்பட்டது.

அதற்குப் பதிலளித்த வெங்கி அட்லூரி, லக்கி பாஸ்கர் படத்தின் இரண்டாம் பாகம் நிச்சயமாக எடுக்கப் போகிறேன், அதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால், அந்த படம் இப்போதைக்கு உடனடியாக தொடங்காது, அதற்கு இன்னும் சில ஆண்டுகள் ஆகும். அதற்கு முன்பாக நான் ஒப்புக்கொண்ட வேறு சில படங்களின் பணிகளை முடிக்க வேண்டி உள்ளது. மேலும் முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால், இரண்டாம் பாகத்தை சரியான முறையில் பல கோணங்களில் ஆராய்ந்து எழுத வேண்டும். அதற்குத்தான் இந்த இரண்டு வருடம் என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !